பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் வாகனங்கள் அதிகளவில் இயக்கம்: எச்சரிக்கை விடுத்த சப்-கலெக்டர்

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வழியாக அதிகளவில் தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டதால், சப்- - கலெக்டர் கண்டித்ததுடன், அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வழியாக, நேற்று காலை அதிகளவில் தனியார் வாகனங்கள் சென்று வந்தன. கோத்தகிரி பகுதியில் நடந்து வரும் சுகாதாரம் மற்றும் ஊரடங்கு பணியை, குன்னுார் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் நேற்று காலை ஆய்வு செய்தார். குறிப்பிட்ட நேரத்தில், 15க்கும் மேற்பட்ட வாகனங்கள், ஆய்வு செய்த இடத்தை கடந்து சென்றன. இதனால், அதிருப்தி அடைந்த சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், போலீசாரை கண்டித்ததுடன், வாகனங்களை ஆய்வு செய்து, தேவையில்லாமல் வந்த வாகன டிரைவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த வாகனங்களின் டிரைவர்கள் உரிய ஆவணங்களை காட்டிய பின் அனுமதிக்கப்பட்டனர். தேவையில்லாமல் வந்த மற்ற வாகன டிரைவர்களுக்கு, சப்-கலெக்டர் உத்தரவுப்படி, அபராதம் விதிக்கப்பட்டதுடன், பஸ் ஸ்டாண்ட் சாலை 'பேரிகார்டு' போட்டு தடை ஏற்படுத்தப்பட்டது. மேலும், வாகனங்கள் இயக்கத்தை கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X