பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்படாத உள்ளூர் மக்கள் கமிஷன் மண்டியை மூட முடிவு।

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஊட்டி:'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, ஊட்டி மார்க்கெட்டில், 31வரை கமிஷன் மண்டிகள் மூடப்படுகின்றன.ஊட்டி, மார்க்கெட்டில், 7 கமிஷன் மண்டிகள் உள்ளன. 350 க்கு மேற்பட்ட கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளை, சிறு விவசாயிகள் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினசரி, 400 டன் அளவுக்கு மலை காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.கோவை, திருப்பூர், ஈரோடு, பாலக்காடு உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, 150 வியாபாரிகள் வந்து கமிஷன் மண்டிகளில் இருந்து, மலை காய்கறிகளை கொள்முதல் செய்து, கர்நாடகா, கேரளா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.நேற்று, ஊட்டி மார்க்கெட்டுக்கு, 40 டன் மலை காய்கறிகள் விற்பனைக்கு வந்தது.'கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் கூட்டத்தை தவிர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் கூட்டமாக வந்ததால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், 31 வரை கமிஷன் மண்டிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.ஊட்டி மார்க்கெட் சங்க செயலாளர் ராஜ முகமது கூறுகையில்,''ஊட்டி கமிஷன் மண்டி உரிமையாளர்கள் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், இன்று முதல், 31ம் தேதி வரை கமிஷன் மண்டிகள் இயங்காது. அதன்பின்பு, விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X