பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் தயார்

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.நீலகிரியில்,கொரோனர தடுப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதில், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால், வெளிமாவட்டம், மாநிலத்தில் சிகிச்சைக்கு சென்று வந்தவர்கள் தற்போது, 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதில், கர்ப்பிணி தாய்மார்கள் சிகிச்சை பெறுவதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணி தாய்மார்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாகனத்தையும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்சையும் விலை இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரிழிவு சிகிச்சை மேற்கொள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி, ஊட்டியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், சுகாதார துறையினர் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X