பொது செய்தி

தமிழ்நாடு

நமக்கு நாமே பாதுகாப்பு ஏற்படுத்தினால் இதுவும் கடந்து போகும்!

Added : மார் 27, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:'கொரோனா' நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு இல்லை. அறுவடை செய்யும் காய்கறிகள் நகரில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் விற்பனை செய்ய அனுமதி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், விவசாயமே பிரதான தொழில். ஆறு மற்றும் வாய்க்கால் பாசனம் ஏதும் இல்லாததால், கிணற்று நீரைக் கொண்டு காய்கறிகள், கீரை வகைகளை, விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் கீரைகளை, உழவர் சந்தை, காய்கறி கடைகள், மளிகை கடைகளிலும் விற்பனை செய்து வந்தனர்.தற்போது, 'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை அடுத்து, மத்திய, மாநில அரசுகள், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் உழவர் சந்தையும்,பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதனால், அறுவடை செய்யப்படும் காய்கறிகளை, எவ்வாறு விற்பனை செய்வது, என்ற கவலை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டது.இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும், காய்கறி கடைகளும், சிறிய அளவிலான மளிகை கடைகளும், திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், தங்கள் தோட்டத்தில், அறுவடை செய்யும் காய்கறிகள் மற்றும் கீரைகளை, நகரிலுள்ள காய்கறி கடைகளிலும், மளிகை கடைகளிலும் விற்பனை செய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேட்டுப்பாளையம் நகர், அண்ணாச்சி சாலையில் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில், உள்ள கடைகள் காலை, 6:00 மணியில் இருந்து, 9:00 மணி வரை மட்டும் இயங்கும் என அறிவிப்பு எழுதி போடப்பட்டுள்ளது. மேலும் நகரில் பல இடங்களில் உள்ள காய்கறி கடைகள், வழக்கம்போல் திறந்துள்ளன.காய்கறி கடை வியாபாரிகள் கூறுகையில், 'வழக்கமான வியாபாரத்தில், 25 சதவீதம் மட்டுமே நடக்கிறது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பொதுமக்கள் காய்கறி கடைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்தாலும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய, காலையிலிருந்து மாலை வரை, கடைகளை திறந்து வைத்துள்ளோம்' என்றனர்.நெரிசல் வேண்டாமே!மக்கள் கூட்டமாக சென்று முண்டியடிக்காமல், சுயபாதுகாப்புக்கு முகக் கவசம் அணிந்து, ஒருவருக்கு ஒருவர் போதிய இடைவெளி விட்டு, அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லலாம். நமது உயிர் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள, இந்த ஊரடங்கு உத்தரவை, நாம் முழுமையாக பின்பற்றினால் மட்டுமே, நோய் பரவலை தடுக்க முடியும். சில காலம், நமக்கு நாமே சுய பாதுகாப்பை ஏற்படுத்தி கொண்டால், இந்த சிரமம் எளிதில் கடந்து போகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X