பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தடி பேச்சுக்கு போலீசார் தடை சாலைகளின் குறுக்கே தடுப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:கிராமங்களின் மையப்பகுதியில் உள்ள மரத்தடியில் கும்பலாக அமர்ந்து பேச, போலீசார் தடை விதித்துள்ளனர்.'கொரோனா' வைரஸ் பரவி வருவதை தடுக்க,நாடு முழுவதும் ஏப்., 14 வரை ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக தடுப்புகளை போலீசார் உருவாக்கியுள்ளனர். பால், மருந்து, காய்கறி, மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்லும் நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் புதுப்புதுார், பழையபுதுார், தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனுார், திருமலைநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் கோவில் அருகேயும், மரத்தடியிலும் கும்பலாக உட்கார்ந்து கொண்டு வெட்டிப்பேச்சு பேசிய கும்பலிடம் தகுந்த அறிவுரை வழங்கி, வீட்டுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் ரோட்டுக்கு நடுவே தடுப்புகள் அமைத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டன. துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து கடைகளுக்கு முன் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று வரிசையாக மருந்துகள் வாங்கி சென்றனர். போலீசார் கூறுகையில்,'இரு சக்கர வாகனங்களில் வரும் நபர்களின் நடமாட்டம், இன்று (நேற்று) குறைவாக காணப்பட்டது. விரைவில் ஊரடங்கு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X