பொது செய்தி

தமிழ்நாடு

'நீங்கள் நலமா? நாங்களும் நலமே!' செக்போஸ்ட்டில் மருத்துவ சோதனை

Added : மார் 27, 2020
Share
Advertisement

அன்னுார்:கஞ்சப்பள்ளி பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில், மக்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.ஊரடங்கு உத்தரவு காரணமாக, அத்தியாவசிய சேவை வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட எல்லையான செல்லப்பம்பாளையத்திலும், திருப்பூர் மாவட்ட எல்லையான கஞ்சப்பள்ளி பிரிவிலும், இரண்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மருத்துவ குழுவினர், வருவாய் துறையினர், போலீசார், இங்கு, 24 மணி நேரமும் சோதனை செய்து வருகின்றனர். கஞ்சப்பள்ளி பிரிவில், டாக்டர் சக்திவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர், கோவை மாவட்டத்துக்குள் வரும் வாகன ஓட்டுனர்கள் உடல்நிலை குறித்து, பரிசோதித்தனர். டிஜிட்டல் தெர்மாமீட்டரில் காய்ச்சல் உள்ளதா என சோதிக்கப்பட்டது. 'காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவர்' என, மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். நேற்று சோதனைச்சாவடிகளில், போலீசார் கடும் கெடுபிடிகளை பின்பற்றினர். முக்கிய காரணம் இருந்தால் தவிர, இருசக்கர வாகனம் உட்பட எந்த வாகனத்தையும் கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அன்னுார், கைகாட்டியில், டி.எஸ்.பி., தென்னரசு மற்றும் போலீசார், இருசக்கர வாகனங்களில் வந்த பலரையும் திருப்பி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X