பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு தண்ணீரில்லாத குளம், குட்டைகள்! வருண பகவான் கருணை காட்டுவாரா?

Added : மார் 27, 2020
Share
Advertisement

அன்னுார்:-அன்னுார் வட்டாரத்தில், பெரும்பாலான குளம், குட்டை, தடுப்பணைகள் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் மைதானம் போல் காட்சியளிக்கின்றன. தீவனம் கிடைக்காமல், கால்நடை வளர்ப்போர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகள் உள்ளன. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 100 ஏக்கருக்கும் அதிகமாக உள்ள அன்னுார், மற்றும் காட்டம்பட்டி குளங்கள் உள்ளன. ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில், 80 குளங்கள் உள்ளன.கடந்த, ஆறு மாதமாக, அன்னுார் பகுதியில் மழை இல்லை. கடும் வறட்சி நிலவுகிறது. குளம், குட்டைகள் வறண்டு போய்விட்டன. அன்னுார் - மேட்டுப்பாளையம் ரோட்டில், 119 ஏக்கர் பரப்பளவுள்ள பொதுப்பணித்துறை குளத்தில், ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டம்பட்டி குளத்திலும், ஒரு ஏக்கரில் மட்டும் நீர் உள்ளது. மீதி, 239 ஏக்கரும், மைதானம் போல் காட்சி தருகிறது. காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, 50 ஏக்கர் குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. கரியாம்பாளையத்தில் உள்ள, 60 ஏக்கர் குளம் நீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. கஞ்சப்பள்ளி, சொக்கம்பாளையம், குமாரபாளையம் என பெரும்பாலான குளங்களில் தண்ணீர் இல்லை. கெம்பநாயக்கன் பாளையத்திலிருந்து, கதவுகரை செல்லும் வழியில் உள்ள தடுப்பணை, பிள்ளையப்பன்பாளையம் தடுப்பணை ஆகியவற்றிலும் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. குளங்களில் நீர் தேங்குவதற்கு வசதியாக, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள், பூலுவபாளையம், சொக்கம்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் தலா, 20 லட்சம் செலவில் கட்டப்பட்டன. இவற்றில் ஒன்றில் கூட தண்ணீர் இல்லை. இதனால், தீவனப் பயிர்களுக்குகூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.வருணபகவான் மனது வைத்தால் மட்டுமே அன்னுார் பகுதியில் குளம் குட்டைகளுக்கு நீர் நிரம்பும். அத்திக்கடவு திட்டத்தில் விரைவில் நீர் குளம் குட்டைகளை நிரப்பப்பட்டால் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் தீர்வு கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X