சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு மீறல்: 4 பேர் மீது வழக்கு

Added : மார் 27, 2020
Share
Advertisement

அன்னுார்:ஊரடங்கு உத்தரவு மீறிய நான்கு பேர் மீது அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சாணம்பாளையத்தில் விசைத்தறி வைத்துள்ளவர் குமார், 44. இவர் நேற்று முன்தினம் விசைத்தறியை இயக்கியுள்ளார். அரசு உத்தரவை மீறி செயல்பட்டதற்காக குமார் மீது போலீசார் வழக்கு பதிந்து, விசைத்தறி கூடத்தை மூட உத்தரவிட்டனர்.கணேசபுரத்தில், அரசு உத்தரவை மீறி, நேற்று முன்தினம் ஓட்டலை திறந்து வைத்து உணவு வழங்கிய உரிமையாளர் ஹரிகிருஷ்ணன், 45 என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.நேற்று அன்னுார், திருப்பூர் மாவட்ட எல்லையான, கஞ்சப்பள்ளி பிரிவில், போலீஸ் எச்சரிக்கையை மீறி, மோட்டார் சைக்கிளில் வந்த, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குலாம் முகமது, 42 என்பவரை போலீசார் கைது செய்தனர். இதே இடத்தில் ஊத்துக்குளியை சேர்ந்த பொன்னுசாமி, 36, என்பவரும் அரசின் உத்தரவை மீறி, வெளியே சுற்றித் திரிந்ததால், கைது செய்யப்பட்டார்.இதேபோல், கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தில், பொன்ராஜ், 40, என்பவர் மளிகை கடையில் மக்கள் கூட்டத்தை அதிக அளவில் சேர்த்து, நோய் பரவுவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறி, கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடையை மூட உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X