சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோய் சந்தேகத்தால் மருத்துவமனையில் திரளும் மக்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

'சளி, காய்ச்சல் உள்ளவர்கள், கொரோனா வைரஸ் கிருமி தொற்று தாக்கி இருக்குமோ என்ற அச்சத்தில், அரசு மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ளது,'' என, தலைமை டாக்டர் சேரலாதன் தெரிவித்தார்.மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, 127 படுக்கைகளும், இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகளும், ரத்தத்தை சுத்தப்படுத்தும் நிலையம் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், பர்லியாறு ஆகிய பகுதிகளில் இருந்து, 1,100க்கும் மேற்பட்டவர்கள், தினமும் வெளி நோயாளியாக அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வெளி நோயாளிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளது. ஆனால், வருபவர்களில் பெரும்பாலானவர்கள், அச்சத்திலேயே உள்ளனர்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சேரலாதன் கூறுகையில், ''மருத்துவமனைக்கு தற்போது, 300க்கும் குறைவானவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். சளி, காய்ச்சல் உள்ளவர்கள் அதிகம் வருகின்றனர். இவர்கள் மருத்துவமனைக்கு வந்ததும், கொரோனா நோய் சம்பந்தமான அறிகுறிகள், எனக்கு உள்ளதா என சோதனை செய்யும்படி கூறுகின்றனர்.''சாதாரண காய்ச்சல், சளி உள்ளவர்கள் பயத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்லாமல், வீட்டிலேயே இருப்பது உடல் நலத்துக்கு நலம்.தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே சென்று வந்தால், கைகளை சோப்பு போட்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X