பொது செய்தி

தமிழ்நாடு

படி... படி... விளையாடு...! எல்லாம் 'கொரோனா' செய்த மாயாஜாலம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சூலுார்':படி... படி... என்று சொன்ன வீடுகளில் எல்லாம், விளையாடு, விளையாடு என, பெற்றோர் கூறுவதை கேட்கும்போது, 'எல்லாம் கொரோனா வைரஸ்' செய்த மாயாஜாலம் என, வெளிப்படையாக தெரிகிறது.தொலைதுார கிராமங்களில், நகரத்தை ஒட்டிய கிராமங்களில், சிறுவர், சிறுமியர் பெரும்பாலானோர், தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பள்ளி முடிந்த பின் வீதிகளில் விளையாடுவது வழக்கம். தனியார் பள்ளி மாணவ, மாணவியர், பள்ளியில் இருந்து வந்தவுடன், டியூசனுக்கு சென்று விடுகின்றனர். விடுமுறை நாட்களில் டியூசன் இல்லை என்றால் மட்டுமே விளையாட்டு. மற்றபடி, பெற்றோரும் படி, படி என்று சொல்வதை ஒரு பாடமாகவே வைத்து இருந்தனர். அத்தகைய மாணவர்களுக்கு படித்துக் கொண்டிருப்பதை தவிர,வேறு ஒன்றும் தெரியாத நிலை இருந்தது.கொரோனா வைரஸ் பரவலால், ஊரடங்கு உத்தரவு அமலானது. பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.சிறியவர் முதல் பெரியவர் வரை வீட்டில் முடங்கி இருக்கும் நிலை கடந்த இரு நாட்களாக உள்ளது. இதனால், படி படி என சொன்ன பெற்றோர், ஏதாவது விளையாடு, விளையாடு எனக் கூறிவருகின்றனர்.இந்த மாற்றம் குறித்து பெற்றோர் கூறுகையில், 'ஊரடங்கு உத்தரவாலும், நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தாலும் யாரும் வெளியில் செல்லவில்லை.நான்கு சுவற்றுக்குள் எவ்வளவு நேரம் சுற்றி சுற்றி வருவது. படி, படி என்று சொன்ன நாங்கள், விளையாடு என வாயார கூறி வருகிறோம். ஆனால், வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடவும் முடியாது. குழந்தைகளோடு சேர்ந்து நாங்களும் விளையாடுகிறோம். இதனால், குழந்தைகள் மகிழ்ச்சி அடைவதால், அதை பார்த்து நாங்களும் மகிழ்ச்சி கொள்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X