மருத்துவமனைகள் மூடல்; பொதுமக்கள் அவதி

Added : மார் 27, 2020
Share
Advertisement

அன்னுார்:-அன்னுாரில், தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அரசு மருத்துவமனையில் திரண்டனர்.அன்னுார் வட்டாரத்தில், படுக்கை வசதிகளுடன் கூடிய, ஏழு மருத்துவமனைகளும், படுக்கை வசதி இல்லாத, 15 சிறிய கிளினிக்குகளும் உள்ளன. இவற்றில், ஏழு மருத்துவமனைகளில், ஆறு மருத்துவமனைகள் மூடப்பட்டு விட்டன.பெரும்பாலான சிறிய கிளினிக்குகளும் மூடப்பட்டுவிட்டன. பல்வேறு உடல்நலக் குறைவுகளுக்காக கிராமங்களில் இருந்து அன்னுார் வந்த பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்தனர்.ஒரே ஒரு தனியார் மருத்துவமனையும், நான்கு சிறிய கிளினிக்குகளும் மட்டுமே இயங்குகின்றன. அவற்றிலும், குறிப்பிட்ட நேரம் மட்டுமே வெளி நோயாளிகளை பார்ப்போம் என்று தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்து, அரசு மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெற்றுச் சென்றனர். இதனால், அன்னுார் அரசு மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் கூறுகையில், 'தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், திடீரென மூடப்பட்டதால் இரவு நேரத்தில் பலர் அவதிக்குள்ளாகினர். அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர் இல்லை. எமர்ஜென்சி என்று அழைத்தால் மட்டுமே வெளியில் தங்கியுள்ள அரசு மருத்துவமனை டாக்டரை அழைத்து வருகின்றனர். இதனால், இரவு நேரத்தில் திடீர் உடல் நலக்குறைவுக்கு, மேட்டுப்பாளையம் அல்லது கோவைக்கு செல்ல வேண்டியுள்ளது' என்றனர்.'அவசர சேவை உண்டு'வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பனிடம் கேட்டபோது, ''தனியார் மருத்துவமனைகளில், அவசர மருத்துவ சேவை மட்டும் வழங்கும்படியும், அதிக அளவு கூட்டம் சேர்க்க வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவசர மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. அது தடைபடவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X