சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்கு சட்டம் மீறினால்வாகனங்கள் பறிமுதல்!'

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெ.நா.பாளையம்:'இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தால், வழக்குப்பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனாலும், சில இளைஞர்கள் தேவையில்லாமல், இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர்.இவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும் போலீசார், அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி வந்தனர். வாகனங்களின் நடமாட்டம் குறையாததால், தற்போது போலீசார் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நேற்று துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் தலா, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.போலீசார் கூறுகையில்,'அரசின் தடை உத்தரவை மீறி, தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தால், வழக்குப்பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202020:18:08 IST Report Abuse
Ram Pollachi கோவை வடக்கு நிலவரம் இப்படி இருக்கு அப்படியே தெற்கு நிலவரத்தையும் போட்டால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X