பொது செய்தி

தமிழ்நாடு

'விளைபொருட்களை தடை செய்யாதீர்!' உதவி இயக்குனர் அறிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement

அன்னுார்:'விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும்போது தடை செய்யாதீர்' என, உதவி இயக்குனர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.கோவில்பாளையம், அன்னுார் வட்டாரங்களிலுள்ள விவசாயிகள், ஈரோடு மாவட்டத்தி லுள்ள புளியம்பட்டி, சத்திக்கு விற்பனைக்கு கொண்டு செல்லவும் அனுமதி மறுக்கின்றனர். இதனால் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற் பட்டுள்ளது.அன்னுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல தடை செய்யக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சில இடங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அரசு உத்தரவுப்படி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்காமல் சம்மந்தப்பட்ட துறையினர் ஒத்துழைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X