கொரோனா பாதிப்பு: சீனா, இத்தாலியை முந்தியது அமெரிக்கா

Added : மார் 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
coronavirus,covid19,america, china, italy, toll, spread,கொரோனா, அமெரிக்கா, சீனா, இத்தாலி, பாதிப்பு, உயிரிழப்பு

வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குலால் அமெரிக்காவில் இது வரை 82,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சீனா, இத்தாலியை அமெரிக்கா முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகில் உள்ள 196 நாடுகளிலும் பரவி மக்களை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

முதன் முதலாக பரவிய சீனாவில், இது வரை 81, 285 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அங்கு 3,287 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. அந்நாட்டில் மொத்தம் இதுவரை 80,600 பாதிக்கப்பட்ட நிலையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில், அதாவது 8,215 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது உயிரிழப்பு அமெரிக்காவில் குறைவாக உள்ளது. அதாவது அமெரிக்காவில் இதுவரை 1,177 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால், நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 13,700 பேருக்கும் கொரோனா தொற்றியது. இதனால் அங்கு மொத்தம் 82,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் உலகிலேய கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-மார்-202015:13:08 IST Report Abuse
Vijay D Ratnam தென்கொரியா, இரான், இத்தாலி, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெய்ன், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க கொரோனா என்ற பெயரில் சீனாவால் பல ஆண்டுகளாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட சீன வைரஸ் என்ற கொடிய கிருமி தொற்று இன்று உலக பொருளாதாரத்தை நாசமாக்கும் வேலையை தொடங்கியுள்ளது. இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரத்தை படுகுழிக்கு தள்ளிக்கொண்டு இருக்கிறது. இந்த அயோக்கியத்தனத்தை உலகம் சும்மா விடக்கூடாது. அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் 20 ட்ரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அது மட்டும் போதாது 20 வருடங்களுக்கு உலகநாடுகள் சீனா மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும். ஏற்றுமதி, இறக்குமதி, பயணிகள் போக்குவரத்து அனைத்தையும் 20 வருடங்களுக்கு முடக்கவேண்டும். இது மற்ற நாடுகளுக்கும் பாடமாக அமையும். சீனர்கள் ஆபத்தானவர்கள் என்று உலகம் அறிய தொடங்கி இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
சீனு,கூடுவாஞ்சேரி ஆமாம். இந்த ஆட்கொல்லி கொரானாவை பறப்பிய சைனா மீது உலக நாடுகள் ஏதாவது கடுமையான நடவடிக்கை எடுக்குமா. மும்பை தாக்குதல் போது நமது இராணுவம் எதிர் தாக்குதல் நடத்தாததன் காரணம் உலகநாடுகள் நம்மை கண்டனம் செய்யும் என்று அப்போதைய அரசாங்கம் சொல்லியதாக கேள்வி.
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
27-மார்-202011:10:35 IST Report Abuse
R. Vidya Sagar Make America Great Again என்று சொல்லி பதவிக்கு வந்தவர் செய்து காட்டியே விட்டார்.
Rate this:
Share this comment
Adhithyan - chennai,இந்தியா
27-மார்-202014:14:50 IST Report Abuse
Adhithyanஇவராச்சும் மக்களுக்கு வரி குறைப்பு தொழில் விருத்தி போன்றவற்றை செய்தார். ஒபாமா ஒன்னும் செய்யல. இப்போ ஒபாமா இருந்த மட்டும் கோரோனோ அப்படியே யு டர்ன் அடிச்சி வெளிய போய்டுமா. சும்மா உண்மையா தெரியாம பேசாதீங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X