பொது செய்தி

இந்தியா

'கொரோனா'வால் தினசரி இழப்பு 35-40 ஆயிரம் கோடி ரூபாய்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

மும்பை: 'கொரோனா' தொற்று பாதிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, 'கேர் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போதைய, 21 நாள் முடக்கத்தின் காரணமாக, 80 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில், தினசரி, 35 ஆயிரம் முதல், 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். மொத்தத்தில் இழப்பு, 6.3 - 7.2 லட்சம் கோடிரூபாயாக இருக்கும்.

இந்த மதிப்பீடு, நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான, 140 - 150 லட்சம் கோடி ரூபாய் என்பதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், முடக்கம் என்பது, 21 நாட்கள் என்பதை தாண்டி, 30 அல்லது 60 நாட்கள் வரை நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.


latest tamil news



நான்காவது காலாண்டில், வளர்ச்சி எதிர்மறையாக இருக்காவிட்டாலும், 1.5 - 2.5 சதவீதமாக குறைய வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய கவலையாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை தான். முன்பை விட இப்போதைய நிலையில், இது மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
27-மார்-202008:37:00 IST Report Abuse
அசோக்ராஜ் ஏழை - பணக்காரன் இடைவெளி இப்போது போல் எப்போதும் இருந்ததில்லையாம். சமப்படுத்த இறைவன் தீர்மானித்து விட்டாரோ? அதிகம் வேண்டாம் பண மூட்டைகளே. ஒரு மூன்று மாதம் கொரோனா தொடர்ந்தால் போதும். குருக்ஷேத்ர யுத்தத்துக்குப் பிறகு பூபாரம் குறைந்தது போல் மனித மக்கள் தொகை ஏனைய பல்லுயிர்களின் விகிதாசாரத்துக்கு சுருங்கும். பூமி எல்லாருக்கும் சம வாய்ப்பு வழங்கும் கோளமாகும். பணக்காரனும் ஏழையாகி நாளைக்கென்று சேர்த்து வைத்து இல்லாமை உருவாக்க முடியாமல் உழைத்து உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படும். எல்லாம் நன்மைக்கே. மனிதம் மலர கொரோனா ஒரு கருவியாகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202006:46:15 IST Report Abuse
ஆப்பு இனி வரும் காலங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிக்க முடியாது. சுத்தமா துடைச்சுவிட்டு போயிடுவாங்க.
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
27-மார்-202005:42:48 IST Report Abuse
HSR அதெல்லாம் மோடி சாதாரணமா சமாளிப்பார்.தீம்கா கான் கிராஸ் அடிச்ச கொள்ளய விட இது எவ்வளவோ மேல்..இன்னும் சொல்ல போனால் ஒண்ணிமே இல்ல..மிச்சம் தான் ஆகியிருக்கு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X