பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை விட கொடூரமான வதந்திகள்; சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
coronavirus,covid19,socialmedia,whatsapp,facebook,கொரோனா

சென்னை: 'கொரோனா' குறித்து, தவறான வதந்திகள் பரப்பப்படுவதால், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்றவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உலகை உலுக்கும், 'கொரோனா' உயிர்க்கொல்லி நோயை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், போர்க்கால அடிப்படையில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. தமிழகத்தில், கொரோனாவால், மதுரையில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil newsஆனால் நேற்று, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சென்னையில் தலா ஒருவர் பலியானதாக, பேஸ்புக்கில் தவறான தகவல் பரவியது. இத்தகவல் பரவியதும், தமிழக சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார், தகவல் பரப்பியவர்களை கண்காணித்து எச்சரித்ததால், உடனடியாக பேஸ்புக்கில் இருந்து, அப்பதிவுகள் நீக்கப்பட்டன.

இதேபோல், மாநிலம் முழுவதும், பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்புபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசின் சமூக ஊடகப் பிரிவுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால், போலீசாரின் பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. 'எனவே, கொரோனா கட்டுக்குள் வரும் வரை, நாடு முழுவதும், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை முடக்க, உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'தவறான தகவல் பரப்புவதால், மக்கள் இடையே தேவையற்ற குழப்பம், பீதி ஏற்படுகிறது. சைபர் கிரைம் போலீசார், கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலும், கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை தடை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-மார்-202006:56:46 IST Report Abuse
P R Srinivasan முன்பெல்லாம் பத்திரிகைகள் மற்றும் பொது ஊடகங்களை சரியான செய்திக்காக நம்பினார்கள். ஆனால் இன்று பத்திரிகைகளும் மற்ற ஊடகங்களும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதால் சமூகம் வலைத்தளங்களையே மக்கள் நம்புகிறார்கள். அங்கும் சில புல்லுருவிகள் புகுந்து கெடுக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
27-மார்-202012:49:00 IST Report Abuse
pattikkaattaan உங்களுக்கு வரும் செய்தி உண்மையா, பொய்யா என்று உறுதியாக தெரியாமல் அடுத்தவர்களுக்கு பரப்பாதீர்கள்.. அப்படி உங்களுக்கு பொய் தகவல் அனுப்புபவர்களை எச்சரியுங்கள் .. அரசு சொல்லும் அறிவுரைகளை கடைப்பிடித்து பொறுப்புடன் நடப்போம்
Rate this:
Share this comment
Cancel
27-மார்-202009:54:56 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா முதலில் அதை செய்யுங்கள்... குரங்கு கையில் கிடைத்த பூமலை போலவும், பயித்தியக்காரன் கையில் சிக்கிய துப்பாக்கியை போலவும் சிலரால் சமூக வலைத்தளம் சீரழிகின்றது, நாட்டையும், மக்கள் நிம்மதியையும் சீரழித்துக்கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X