பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (77)
Share
Advertisement
police,curfew,TamilNadu,CoronavirusOubreak,IndiaBattlesCoronavirus,போலீஸ்,லத்தி

சென்னை: அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி, 'ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கி உள்ளனர். சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன், 'வாட்ஸ் ஆப்' ஆடியோ வழியாக, போலீசாருக்கு வழங்கியுள்ள அறிவுரைகள்: ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.


latest tamil newsபொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள். கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும்

வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
01-ஏப்-202003:02:19 IST Report Abuse
.Dr.A.Joseph இந்த நாட்டின் பெரிய சாப கேடே பொது அறிவு இல்லாதவன் போலீஸ்காரன் ஆனதுதான்.
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
30-மார்-202012:02:28 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி போலீசாருக்கு ஆளுக்கு ஒரு குச்சிமிட்டாயைக் கொடுத்துவிட்டால் தெருவின் ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்.தெருவில் ஆட்டம் போடும் தொண்டுகள் அவனவன் பாட்டிலும் கும்மாளமடிப்பார்கள். வரவர எடப்பாடி தன்னுடைய நிழலைக் கண்டே பயப்படுவார் போல இருக்கிறது. பேசாமல் போலீசாருக்கும் மருத்துவத் துறைக்கும் லீவைக்கொடுத்து அனுப்பி விட்டால் அவர்களும் தங்களது குழந்தை குட்டிகளோடு வீட்டில் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
29-மார்-202002:29:05 IST Report Abuse
Subbanarasu Divakaran adi male adi vaittal ammium nagarum enra pazhamozhiai tappaga terindu kondirikiraargal.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X