இந்தியா

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு

Added : மார் 27, 2020
Share
Advertisement
 அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு

புதுச்சேரி : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வது தொடர்பாக, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமுலில்படுத்தப்பட்டு, பொது மக்கள் வீடுகளிலே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.எனினும், வெளி மாநிலங்களில் இருந்து மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டுவருவதில் பல்வேறு தடைகள் இருந்து வருகிறது. பொருட்களின் வரத்தும் குறைந்த அளவில் தான் உள்ளது.

பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருப்பதால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சட்டசபை கேபினட் அறையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இக்கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், கலெக்டர் அருண், செயலர் வல்லவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில், முதல்வர் நாராயணசாமி, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X