இந்தியா

வீடு தேடி வருகிறது அத்தியாவசிய பொருட்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. என, கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காலத்தில், மருந்து, மளிகை, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசும், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பும் இணைந்து, பொது மக்களின் வீடுகளுக்கு, அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் மற்றும் 'வாட்ஸ் ஆப்' எண்கள் மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். புதுச்சேரியில் உள்ள தொகுதிவாரியாக வணிகர்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ளவர்களுக்கு, 24 மணி நேரத்தில் வேண்டிய பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும். இத்திட்டத்தை, முதல்வர் நாராயணசாமி, நேற்று துவக்கி வைத்தார்.கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவி குழுவினர் மூலமாக விநியோகம் செய்ய அரசு உத்தேசித்துள்ளது. இது தொடர்பான இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் குறித்து தகவல்கள் பிறகு வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X