இந்தியா

காட்டேரிக்குப்பத்தில் சீனியர் எஸ்.பி., ஆய்வு

Added : மார் 27, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பம், திருக்கனுார் பகுதியில் சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

'கொரோனா' வைரஸ் பரவுவதை தவிர்க்க, புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தி, வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தியும், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.காட்டேரிக்குப்பம் எல்லைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் படுவது குறித்து, சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், அத்தி யாவசிய தேவை இன்றி யாரேனும் சாலையில் சுற்றி திரிந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

பின்னர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வாழைப்பழம் வழங்கினார்.தொடர்ந்து, திருக்கனுார் பஜார் வீதி, புதுச்சேரி எல்லைப்பகுதியான திருக்கனுார், மணலிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X