இந்தியா

'கொரோனா' சிகிச்சைக்கு வெண்டிலேட்டர் வாங்க எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதி ஒதுக்கீடு

Added : மார் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா வைரஸ் தொற்றுசிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்கு 'வெண்டிலேட்டர்' எனப்படும் சுவாசக் கருவிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. எனவே, வெண்டிலேட்டர் வாங்குவதற்காக, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 36 லட்சத்தை லோக்சபா எம்.பி., வைத்திலிங்கம் நேற்று முன்தினம் வழங்கினார்.இந்நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பயன்படுத்துவதற்காக ஐ.சி.யூ., வெண்டிலேட்டர்கள் 5 வாங்குவதற்கு, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சம் ரூபாயை கோகுலகிருஷ்ணன் எம்.பி., வழங்கி உள்ளார்.

இதற்கான ஒப்புதல் கடிதத்தை, தொகுதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தும் நோடல் ஏஜென்சியான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரவிப்பிரகாஷூக்கு, அவர் அனுப்பி உள்ளார்.அன்பழகன் எம்.எல்.ஏ.,புதுச்சேரி அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அளித்துள்ள கடிதம்:புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் போதிய நிதியின்றி சுகாதாரத் துறை சிக்கித் தவிக்கிறது. அதனால் எம்.எல். ஏ.,க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிறிது நிதியை ஒதுக்கித்தர வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

அதனை ஏற்று, இந்த ஆண்டிற்கான எனது உப்பளம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை ஒதுக்கித்தர சம்மதிக்கிறேன். இந்த நிதியில், அரசு பொது மருத்துவமனை மற்றும் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி மக்களின் நலன் காத்திட வேண்டும்.இவ்வாறு இவர் கூறியுள்ளார்.

சாமிநாதன் எம்.எல்.ஏ.,முதல்வர் நாராயணசாமிக்கு, சாமிநாதன் எம்.எல்.ஏ., அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவ டிக்கைகளை அரசு மேற் கொண்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது பங்களிப்பாக, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தை வழங்குகிறேன். இந்த தொகையை பயன்படுத்தி, வெண்டிலேட்டர்களை அரசு உடனடியாக வாங்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X