இந்தியா

வாரணாசியில் தவிக்கும் புதுச்சேரி பக்தர்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : வாரணாசிக்கு சென்றுள்ள புதுச்சேரியை சேர்ந்த 22 பேர், ஊரடங்கு உத்தர வால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

நெல்லித்தோப்பு சக்தி நகரை சேர்ந்த ரவி, பெரிய நாயகம், ரங்க நாயகி, சாந்தி, அம்சா, ராஜேந்திரன் மற்றும் சாரம், கொசப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 22 பேர், ஆன்மிக பயணமாக வாரணாசிக்கு சென்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பஸ், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. இதனால் ஊர் திரும்ப முடியாமல், கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வாரணாசியில் அவர்கள் தங்கி உள்ள ஓட்டலிலேயே தவித்து வருகின்றனர். தாங்கள் ஊர் திரும்ப உதவுமாறு உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப் பட்டது. வாரணாசியில் தவிக்கும் புதுச்சேரி மக்களை உடனடியாக மீட்க வேண்டும் என, சிவா எம்.எல்.ஏ., முதல்வர் நாராயணசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அதை தொடர்ந்து அவர், சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகள், மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X