பொது செய்தி

தமிழ்நாடு

மக்களுக்காக பிரதமர் செய்ய வேண்டியது என்ன? தினமலர் ஆர்.லட்சுமிபதி கோரிக்கை

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
RLakshmipathy,dinamalar,Modi,PM,coronavirus,coronaoutbreaks,தினமலர்,மோடி,ஆர்லட்சுமிபதி,கோரிக்கை

மதுரை: கொரோனா அச்சத்தில் ஊரடங்கில் உள்ள பொதுமக்களுக்கு செய்ய வேண்டியது குறித்து பிரதமர் மோடிக்கு தினமலர் சார்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

பிரதமர் நேற்று முன் தினம் நாடு முழுவதிலும் உள்ள பத்திரிகையாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். பின்னர் இரவு 8:40 மணிக்கு தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியுடன் தனியாக அலைபேசியில் பேசினார். கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி நம்பகமான செய்திகளை பொதுமக்களிடம் எடுத்துச்செல்லும் தினமலர் பணியை பிரதமர் பாராட்டினார்.

பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாக அறிவித்த 21 நாள் ஊரடங்கு ஆகியவற்றை லட்சுமிபதி குறிப்பிட்டு பிரதமருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். அப்போது தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு செய்ய வேண்டியது பற்றிய யோசனைகளை தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து கீழ்க்காணும் கோரிக்கைகளை மின்னஞ்சல் மூலம் பிரதமருக்கு அனுப்பினார்.


latest tamil news1. ஊரடங்கால் வேலையிழந்த தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசு ரூ.1,500ஐ தரவேண்டும்.

2. ஒரு மாதம் இலவசமாக அரிசி, பருப்பு ரேஷனில் வழங்க வேண்டும்.

3. வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.

4. வங்கி கடன், மாத தவணை வசூலிப்பதை 3 மாதம் தள்ளிவைக்க வேண்டும். ஒரு மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

5. வங்கிகள் வராக்கடன் என அறிவிப்பதை 90 நாளில் இருந்து 120 நாளாக மாற்ற வேண்டும்.

6. ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் விற்கும் போது யாரும் கூடுதலாக வாங்கி பதுக்க அனுமதிக்கக்கூடாது. அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

7. வங்கிகளுக்கு முதியவர்கள் செல்கின்றனர். அவர்கள் செல்வதை தடுக்க வங்கிகளையும் மூடுவதே நல்லது. ஏ.டி.எம்.,களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

8. கொரோனா பாதிப்பு சந்தேகம் உள்ளவர்களை தனிமைப்படுத்தி கவனிக்க மையங்கள் தேவைப்படும். அதற்கு தனியார் லாட்ஜ்களை அரசு பயன்படுத்த வேண்டும்.சிகிச்சைக்கு நாடு முழுவதும் தனியார் மருத்துவ மனைகளிலும் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.

9. தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் (சி.எஸ்.ஆர்.) மூலமும் அரசு மேம்பாட்டு புனரமைப்பு பணிகளை செய்யலாம். இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-மார்-202021:45:04 IST Report Abuse
Matt P லட்சுமிபதி அவர்கள் தினக்கூலியில் வாழ்பவர்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஸ்டாலின் இன்னான்னா மாநில அரசு எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்று சொன்னார். தற்போது திருமணங்கள் எளிமையா நடப்பதாலும் பள்ளிக்கூடங்கள் விடுமுறையாக இருப்பதாலும் அவைகளையும் உபயோகப்படுத்தலாமே.
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
27-மார்-202019:45:49 IST Report Abuse
mrsethuraman  தினமலரின் சமூக பொறுப்பிற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் .வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
27-மார்-202019:40:02 IST Report Abuse
thamodaran chinnasamy காவல் துறையினர் , அத்து மீறி ஊர் சுற்றும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, மேற்படி வாகனங்களை நிலைமை சீரடைந்த உடன் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையினை பெனால்டி ஆகா வசூல் செய்து அரசுக்கு சேர்ப்பித்தாலே போதும். இதை அரசும் காவல் துறையும் உடனடியாக பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகின்றேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X