இந்தியா

புதிய கலை கல்லூரிகள் துவங்க கவர்னர் ஒப்புதல்! இன்ஜி., படிப்பு வீழ்ச்சி எதிரொலி

Added : மார் 27, 2020
Share
Advertisement
புதிய கலை கல்லூரிகள் துவங்க கவர்னர் ஒப்புதல்! இன்ஜி., படிப்பு வீழ்ச்சி எதிரொலி

புதுச்சேரி: புதிதாக ஐந்து தனியார் கலை அறிவியல் கல்லுாரிகள் துவங்க அமைச்சரவையின் முடிவிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால், மாநிலத்தின் கலை அறிவியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள், 15 தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள் என மொத்தம் 17 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். புற்றீசல் போல் இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவங்கப்பட்டதால், தேவைக்கு அதிகமாக இன்ஜினியர்கள் வெளிவந்தனர்.இதில், 40 சதவீத திறன்மிக்க மாணவர்களே, பெரிய நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன், பணி வாய்ப்பை பெறுகின்றனர். சிலர் படிப்பிற்கே சம்பந்தமே இல்லாத வங்கிப்பணி, அலுவலகப்பணி, ஸ்விக்கி, பீஸா டெலிவரி பாய் போன்ற கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். பலர் வேலையின்றி உள்ளனர்.

இன்ஜினியரிங் பட்டதாரிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததால் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளில் போட்டி அதிகரித்தது. அளவுக்கு அதிகமான பட்டதாரிகள் கிடைத்ததால் சம்பளம் பாதாளத்துக்கு இறங்கியுள்ளது. பல லட்சம் செலவு செய்து, இன்ஜினியரிங் படித்துவிட்டு சாதாரண வேலைக்கு, குறைந்த சம்பளத்திற்கு செல்லும் நிலை உள்ளதால், மாணவர்களின் கவனம் தற்போது கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகள் மீது திரும்பியுள்ளது. பி.காம்.,பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை படிக்கும் மாணவர்களுக்கு, பன்னாட்டு ஐ.டி., நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான மாணவர்களின் முதல் சாய்ஸ் கலை, அறிவியல் படிப்பாகவே உள்ளது.

இன்ஜினியரிங் கல்லுாரிகளை போன்று, பல முன்னணி நிறுவனங்கள் கலை அறிவியல் கல்லுாரிகளிலும், வளாக நேர்காணல் நடத்துவதும், மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்க காரணமாகி உள்ளது. உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் கல்வி தந்தைகளை யோசிக்க வைத்துள்ளது.இதனால் இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவங்கும் எண்ணத்தை கைவிட்டு, கலை அறிவியல் கல்லுாரிகளை துவங்க முடிவு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். இதில் 5 கலை, அறிவியல் கல்லுாரிகள் புதிதாக துவங்க தற்போது அமைச்சரவையில் வைத்து கவர்னருக்கு அனுப்பப்பட்டது. கவர்னரும் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலத்தில்6அரசு கல்லுாரிகள், 4 சொசைட்டி கல்லுாரிகள், 5தனியார் கல்லுாரிகள் என மொத்தம் 15 கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. தற்போது, ஐந்து கல்லுாரிகள் துவங்க அமைச்சரவையின் முடிவிற்கு, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதால் மாநிலத்தின் கலை, அறிவியல் கல்லுாரிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்கிறது.


புதிதாக வர உள்ள கல்லுாரிகள்


கல்லுாரி பெயர் - இடம்

1. பாரதி கலை அறிவியல் கல்லுாரி - கொடாத்துார்
2.கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி - மண்ணாடிப்பட்டு
3.பாரதியார் கலை அறிவியல் கல்லுாரி - திருவேட்டக்குடி
4. கணேஷ் கலை அறிவியல் கல்லுாரி - முள்ளோடை
5. ஆல்பா கலை அறிவியல் கல்லுாரி - மணப்பட்டு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X