பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் பென்ஷன் கோரி விருதையில் தர்ணா

Added : மார் 27, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : முதியோர் பென்ஷன் வழங்காததை கண்டித்து, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.விருத்தாசலம் அடுத்த க.புத்துார், கார்குடல் கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.இது குறித்து சமூக நலத்திட்ட அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் நேற்று காலை 10:30 மணியளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், ஒரு வாரத்திற்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை யேற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X