பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளிக்கு போதிய விலை விவசாயிகள் கோரிக்கை

Added : மார் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சிறுபாக்கம் : மரவள்ளிக்கு போதிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுபாக்கம் மற்றும் சுற்றியுள்ள மங்களூர், மலையனுார், அடரி, மாங்குளம் உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் தோட்டக்கலை பயிர்களான பர்மா, குங்குமரோஸ், வெள்ளை ரோஸ், புதிய ரகமான தாய்லாந்து மரவள்ளி ஆகிய ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.சாகுபடி செய்த மரவள்ளி கிழங்குகளை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்த கிழங்குகளை புரோக்கர்கள் மூலம் ஆத்துார், சேலம், ராசிபுரம், தலைவாசல், காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளில் (சேகோ பேக்டரி) விற்று வருகின்றனர்.
100 கிலோ எடையுள்ள கிழங்கு மூட்டை 500 முதல் 600 ரூபாய் வரை மட்டுமே புரோக்கர்கள் மூலம் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனால் அதிக மகசூல் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் சிறுபாக்கம் பகுதி கிராம விவசாயிகள் கவலை அடைவது தொடர்கிறது.எனவே, மரவள்ளிக்கு போதிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
27-மார்-202008:17:01 IST Report Abuse
muthu Rajendran உழைக்கிற விவசாயிக்கும் பலனில்லை உண்ணுகிற மனிதருக்கும் பயனில்லை இடையில் வருகிற போக்குவரத்து செலவு வியாபாரிகளுக்குத்தான் கொண்டாட்டம் கோயம்பேடு மார்க்கெட் விலையை நான்கு மடங்கு உயர்த்தி விற்கிறார்கள். வீதிக்கு வீதி கடை இருக்கு : ஆனால் விலைக்கு வாங்க எங்கே காசிருக்கு. கட்டுப்படுத்த யாருமில்லை :: கடைக்காரருக்கு எந்த பயமுமில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X