பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம்; சிதம்பரத்தில் அமைச்சர் சம்பத் பெருமிதம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சிதம்பரம் : 'முதல்வர் அடிக்கிற ஒவ்வொரு அடியிலும் ஸ்டாலின் முதுகு பிய்ந்து போகிறது' என அமைச்சர் சம்பத் பேசினார்.
சிதம்பரத்தில் ஜெ., பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, சுந்தர், தில்லை கோபி, சேகர், நாகராஜ், கருப்பு ராஜா முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கலைமணி, காணுார் பாலு, டேங்க் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் சம்பத் பேசியதாவது;இந்த அரசு சிறுபான்மையினரை காக்கும் அரசாக உள்ளது. பட்ஜெட்டை குறை கூறும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை. 2011ல் கருணாநிதி ஆட்சியை விட்டு இறங்கும் போது கஜானாவை காலி செய்து விட்டு சென்றார். இப்போது இவர் பேசுகிறார்.இதுவரை இல்லாத அளவில் கல்வித்துறைக்கு 34.181 கோடி, ஒதுக்கியவர் முதல்வர் பழனிச்சாமி. அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 500 கோடி, குடி மராமத்து பணிக்கு 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் வாழ்வாதாராத்தை காத்தவர் நமது முதல்வர்.முதல்வர் அடிக்கிற ஒவ்வொரு அடியிலும் ஸ்டாலின் முதுகு பிய்ந்து போகிறது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியை அரசு ஏற்றது உங்களுக்கு பம்பர் பரிசு. இனி சிறப்பான, மேம்பட்ட சிகிச்சை மக்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X