சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலம் நகராட்சி உர கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி உர கிடங்கில், பிளாஸ்டிக் கழிவுகள் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் பெரியகண்டியங்குப்பம் மாட்டுச்சந்தை வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில் உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு நகரில் சேகரிக்கப்படும் மக்கும் மக்காத குப்பைகளை கொண்டு வந்து, தரம் பிரித்து, அவற்றை உரமாக மாற்றும் பணி நடக்கிறது.நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், உரக்கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால், அதற்குள் பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், குப்பைக் கிடங்கு வளாகத்திற்குள் மர்ம நபர்கள் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் போதை தலைக்கேறிய மர்ம நபர், குப்பைக்கு தீ வைத்து எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X