பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்வு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: தாய்லாந்துகாரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், அவர்களுடன் நெருங்கி பழகிய ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து முஸ்லிம் மத பிரசங்கத்துக்காக, ஈரோட்டுக்கு வந்து, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில், ஐந்து பேர் தங்கினர். இதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் உட்பட, 15 பேர் பெருந்துறை மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது ரத்தம், சளி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்ததால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இவர், ஈரோட்டை சேர்ந்தவர் என்பதும், தாய்லாந்தில் இருந்து வந்த நபர்களுடன், பல்வேறு இடங்களுக்கு இவர் சென்றதும் தெரியவந்தது. ஈரோட்டை சேர்ந்தவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: மூன்றாவதாக பாதித்த நபர், எந்த பகுதியை சேர்ந்தவர் என கூற இயலாது. இதனால் அப்பகுதியில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். ஏற்கனவே, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதியில், 295 குடும்பத்தை சேர்ந்த, 1,118 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எவருக்கும் காய்ச்சல், சளி, இருமல் ஏற்படாமல் இருக்க வேண்டும். அவற்றை கண்டறியும் பணியில், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்து நபருக்கு மட்டும் தொற்று இருந்திருந்தால், அத்துடன் இப்பிரச்னை தீர்வு கண்டிருக்கும். ஈரோட்டை சேர்ந்தவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், தாய்லாந்து நாட்டினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு, பரவி இருக்குமோ? என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X