பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறியதாக 113 வழக்குப்பதிவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஊரடங்கு உத்தரவை மீறியதாக, ஈரோடு மாவட்டத்தில், 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம், பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலர் அச்சம் மறந்து, சாலைகளில் உலா வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெளியே சுற்றி திரிந்தது, அவசியமின்றி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்தது தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில், 113 வழக்குகள் பதிந்து, 125 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி சுற்றித்திரிவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.* மொடக்குறிச்சி, அட்டவனை அனுமன்பள்ளி, ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சேகர், 35; கொமாரபாளையம் அருகேயுள்ள சகாயபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 39; கொல்லன்வலசை சேர்ந்தவர் பழனிசாமி, 48; வடபழனி அருகேயுள்ள கொமரபாளையம் காலனியை சேர்ந்தவர் மூர்த்தி, 26; ஆகியோர், ஊரடங்கு உத்தரவை மீறி நடமாடியதால், நான்கு பேர் மீதும், அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குளிக்க வந்தவர்களுக்கு தண்டனை: சத்தியமங்கலத்தை அடுத்த சிவியார்பாளையம் பகுதியில், ஹைவே பேட்ரோல் போலீசார், நேற்று மதியம் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது பவானி ஆற்றங்கரையோரம், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, ஆற்றில் குளிக்க வந்ததாக கூறினர். எரிச்சலடைந்த போலீசார், வாலிபர்களை தோப்புக்கரணம் போட வைத்து, எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X