பொது செய்தி

தமிழ்நாடு

'கருணை சுவர்' மூலம் உணவு வழங்கல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், சாலை ஓரங்களில் வசிப்போருக்கு, 'ரோட்டரி ஈரோடு காஸ்மாஸ்' அமைப்பின், 'கருணை சுவர்' மூலம் இரவு உணவு வழங்கினர். கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில், கடந்த, 22 முதல், 23 காலை, 5:00 மணி வரை ஊரடங்கு உத்தரவும், அதை தொடர்ந்து, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான உணவகங்கள், தெருவோர கடைகள் மூடப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி தலைமை அலுவலகம், பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் தெரு ஓரங்களில் வசிப்போர் உணவுக்காக சிரமப்பட்டனர். இதனால், 'கருணை சுவர்' மூலம், சாலையோரம் இருந்தவர்களுக்கு இரவு உணவாக சாம்பார் சாதம் வழங்கி வருகின்றனர். கொரோனா சூழல் சீராகும் வரை உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர். தவிர, கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாக உதவியுடன், குறிப்பிட்ட இடத்தில் இவர்களை தங்க வைத்து, முறைப்படி உணவு வழங்கவும் முயன்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X