பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் வீடற்ற 80 பேரை தனிமைப்படுத்தி கவனிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

கோபி: கோபியில் வீடற்ற, 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, நகராட்சி சார்பில் கவனிக்கப்படுகின்றனர். 'கொரோனா' வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, உணவுக்கு வழியின்றி வீடற்ற நிலையில், சாலையோரம் வசிப்போரை கண்டறிந்து தனிமைப்படுத்த, ஈரோடு மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. இதன்படி கோபி நகராட்சி, ஜூனியர் ரெட் கிராஸ் இணைந்து, கோபியில் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், 26 ஆண்கள், 24 பெண்கள், 30 குழந்தைகள் என, 80 பேர் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரும், கோபி, வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப்பள்ளியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். காலை உணவு கோபி அம்மா உணவகத்தில் இருந்தும், மதியம் மற்றும் இரவு உணவு, தனியார் பங்களிப்பு மூலமும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியரின் கழிப்பிடத்தில், இருபாலரும் குளிக்க வசதியாக, ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது. அன்றாடம் தேவையான பொருட்களை, தனியார் மூலம் வாங்கித்தருகின்றனர். இங்குள்ள யாரும், பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. இவர்களின் குழந்தைகள், பள்ளி வளாகத்தில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடி பொழுது கழிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X