காமராஜர் பள்ளி மைதானத்தில் காய்கறி மொத்த விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காமராஜர் பள்ளி மைதானத்தில் காய்கறி மொத்த விற்பனை

Added : மார் 27, 2020
Share
ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை, மொத்த வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., தென்னரசு முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: முதல்வரின் ஆலோசனைப்படி, கூட்டம் கூடுவதை தவிர்க்க, காய்கறி சந்தையை பிரித்து விற்பனை செய்ய வேண்டும். இதன்படி, நேதாஜி காய்கறி சந்தை இன்று (நேற்று) முதலே, காமராஜர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடக்கிறது.

ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை, மொத்த வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., தென்னரசு முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது: முதல்வரின் ஆலோசனைப்படி, கூட்டம் கூடுவதை தவிர்க்க, காய்கறி சந்தையை பிரித்து விற்பனை செய்ய வேண்டும். இதன்படி, நேதாஜி காய்கறி சந்தை இன்று (நேற்று) முதலே, காமராஜர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடக்கிறது. பழங்கள் விற்கப்படும் சந்தை, ஈரோடு பஸ் ஸ்டாண்டிலும் நடக்கும். விற்பனையாளர், உரிமையாளர்கள் நலன் கருதி, தக்காளி, வெங்காயம் ஆகியன, 27, 28ல், நேதாஜி காய்கறி சந்தையில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. சில்லறை வியாபாரிகள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்த்து, இடைவெளி கடைபிடித்து காய்கறி வாங்கி, விற்க வேண்டும். காமராஜர் பள்ளி மைதானம் மற்றும் பஸ் ஸ்டாண்டில் நோய் தொற்றை தவிர்க்க, தேவையான வழிமுறை கடைபிடிக்கப் படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X