10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி எப்போது? கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி எப்போது? கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Added : மார் 27, 2020
Share
கோபி: ''கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவு, எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்பதை அறிந்து, பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அரசு மருத்துவமனை, தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

கோபி: ''கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவு, எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்பதை அறிந்து, பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், அரசு மருத்துவமனை, தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 'கொரோனா' வைரஸ் தாக்கம் காரணமாக, போர்க்கால அடிப்படையில், முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வரும் நாட்களுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால், இந்நோய் பரவுவதை முற்றிலும் தடுக்க முடியும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவு எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்பதை அறிந்து, அதன்பின் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும். ஆண்டுதோறும் ஏப்., இரண்டாம் வாரம் முதல், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். கொரோனா வைரஸ் தாக்கத்தின் நிலைமைக்கு ஏற்றாற்போல், கோடை விடுமுறை குறித்து, முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X