கொலை மிரட்டல் விடுத்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Added : மார் 27, 2020
Share

ஈரோடு: ஈரோட்டில், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு, பி.பெ. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தமிழ்மணி, 28; இவர் மகன் பக்கத்து வீட்டுக்கு முன் இரு தினங்களுக்கு முன் விளையாடியுள்ளார். பக்கத்து வீட்டுகாரரான சண்முகம், 50, சிறுவனை திட்டியுள்ளார். மகனை எதற்காக திட்டுகிறீர்கள்? என தமிழ்மணி கேட்டுள்ளார். 'இனி, மீண்டும் இதுபோல் விளையாடினால் உன் மகனை கொன்று விடுவேன்' என்று சண்முகம் மிரட்டினாராம். தமிழ்மணி புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார், சண்முகத்தை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X