பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த சோகையை தடுக்க அவல் உருண்டை: திருச்சியில் 4,500 பேருக்கு வழங்க முடிவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ரத்த சோகையை தடுக்க, 4,500 குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வெல்லம் கலந்த சிகப்பு அவல் உருண்டை வழங்கப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை ஏற்படுகிறது. இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமின்றி, அவருக்கு பிறக்கும் குழந்தையும் பாதிக்கப்படும். இதனால் அக்குழந்தை கற்றல் திறன் குறைபாடுடைய குழந்தையாக வளர்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ரத்த சோகையால், 55.4 சதவீதம் பெண்களும், 50.7 சதவீதம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், ஓராண்டுக்கு, 3 சதவீதம் ரத்த சோகையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ரத்தசோகையை குறைக்கும் வகையில், தமிழக அரசால் வரும் நிதியாண்டில், வெல்லம் கலந்த 'சிவப்பு அவல் உருண்டை' வழங்கும் புதிய முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக, வையம்பட்டி வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும், 2,326 குழந்தைகளுக்கும், அந்த நல்லூர் வட்டாரத்தில் உள்ள, 15 வயது முதல், 49 வயதுக்குட்பட்ட, 2,153 பெண்களுக்கும் என, மொத்தம், 4,479 பேருக்கு தலா, 100 கிராம் சிகப்பு அவல், வெல்லம் கலந்த உருண்டை, 6 மாதங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செலவாக, 56.83 லட்சம் ரூபாயை ஒதுக்கி, அண்மையில் சட்டசபையில் நடந்த சத்துணவு துறை மான்ய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X