பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி மத்திய மண்டலத்தில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றிய 1,289 பேர் கைது

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறி டூவீலர் மற்றும் கார்களில் வெளியில் சுற்றிய, 1,289 பேர் கைது செய்யப்பட்டு, 802 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், பலர் உத்தரவை மதிக்காமல் டூவீலர்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், அவர்களை போலீசார் கண்டித்து, மீண்டும் வரக்கூடாது என்று அனுப்பி வைத்து வருகின்றனர். ஆனால் பலரும் அதை கேட்காமல், திரும்ப, திரும்ப வெளியில் சுற்றி வருகின்றனர். இதையடுத்து நேற்று காலை முதல், வெளியில் சுற்றியவர்களை கைது செய்து, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில், நேற்று ஒரு நாளில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய, 1,289 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த, 802 டூவீலர்கள், 22 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, சொந்த ஜாமினில் நேற்றே விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் வெளியே சுற்றினால், சிறையில் அடைக்கப்படுவீர் என்று எச்சரித்து, அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X