பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் மருத்துவமனைகளில் எவருமில்லை'

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: ''திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவோர் எவருமில்லை,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினர்.
திருவண்ணாமலை, கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம், அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. தொடர்ந்து அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் கொரோனா வைரஸ் சிறப்பு பிரிவை ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில், 41 சோதனைச்சாவடிகள் அமைத்து மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் இதர துறைகள் மூலம், கடந்த, 24 மாலை, 6:00 மணி முதல், 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடக்கிறது. மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்காக, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் மாவட்டத்தில், எவருமில்லை. வெளிநாடுகளிலிருந்து வந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட, 139 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும், 6,000க்கும் மேற்பட்ட, தூய்மை பணியாளர்கள் மூலம், சுகாதார பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X