பொது செய்தி

தமிழ்நாடு

5,378 வாகன ஓட்டிகள் மீது பாய்ந்தது வழக்கு

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகர், மாவட்டத்தில், இரு நாளில், '144' தடை உத்தரவை மீறி, வாகனம் ஓட்டிய, 5,378 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர். அத்துடன், ஏழு ஆட்டோக்களை பறிமுதல் செய்ததோடு, 128 பேரை கைது செய்தனர்.
'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, '144' தடை உத்தரவு அமலானதால், மக்கள், வீட்டிலேயே இருக்க, சேலம் மாநகர போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அதை மீறி, வாகனங்களில் உலா வந்தவர்களை, போலீசார் மறித்து விசாரித்து, நியாயமான காரணங்களுடன் வந்தவர்களை அனுப்பினர். அதேநேரம், தேவையின்றி, வாகனங்களில் உலா வந்த, 1,812 பேர் மீது, நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர். மேலும், அனுமதியின்றி இயங்கிய, ஏழு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். இரண்டாம் நாளாக, நேற்று மாலை, 7:00 மணி நிலவரப்படி, தடையை மீறி உலா வந்த, 1,788 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர். அதேபோல், சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 1,320 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்த போலீசார், பொது இடங்களில் விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாக, 122 பேரை கைது செய்தனர். நேற்று, 458 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிந்த போலீசார், ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை, சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X