பொது செய்தி

தமிழ்நாடு

2ம் நாளாக வெறிச்சோடிய சாலைகள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: இரண்டாம் நாளாக அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. 'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தவிர்த்து, மற்ற வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளான நேற்று, சேலம் - கோவை நான்கு வழிச்சாலை உள்பட, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. அதேபோல், மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை, மருளையம்பாளையத்தில், ஆட்டையாம்பட்டி போலீசார் சார்பில், கடந்த, 24 மாலை, 6:00 முதல் சாலை நடுவே தடுப்பு வைத்து, சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர். அந்த வழியாக அத்தியாவசியப்பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் தவிர்த்து, மற்ற வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்புகின்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும், அனைத்து பஸ் ஸ்டாண்டுகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X