பொது செய்தி

தமிழ்நாடு

'ஏற்காட்டில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை'

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஏற்காடு: ''ஏற்காட்டில், கொரோனா வைரஸ் தொற்று, யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை,'' என, மருத்துவ அலுவலர் தாம்சன் பேசினார்.
'கொரோனா' தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், ஏற்காடு ஒன்றிய அலுவலகத்தில், நேற்று நடந்தது. பி.டி.ஓ., குணசேகர் தலைமை வகித்து பேசியதாவது: ஏற்காட்டில், அனைத்து கிராமங்களிலுள்ள வீடு, அலுவலகம், மக்கள் கூடுமிடங்களில், கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. விழிப்புணர்வு துண்டு பிரசுரம், 15 ஆயிரம் வினியோகிக்கப்படும். '144' தடை உத்தரவால், ஆதரவற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் போதிய உணவு வழங்க, அங்கன்வாடி பணியாளர்கள் மூலம், உணவு சமைத்து வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். மருத்துவ அலுவலர் தாம்சன் பேசுகையில், ''ஏற்காட்டில், 'கொரோனா' தொற்று யாருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. வெளியூர், வெளி மாவட்டம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 'கொரோனா' குறித்த சந்தேகம், தகவல் கொடுக்க, 0427 - 2450023, 2450022, 2450498 எனும், சுகாதாரத்துறை, சேலம் துணை இயக்குனர் அலுவலகத்துக்கு தொடர்பு கொள்ளலாம். சிறு உடல் உபாதைக்கு, மருத்துவமனை வருவதை, மக்கள் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

பூங்கா, பள்ளிகளில் ஆய்வு: ஏற்காடு மான்ட்போர்ட், சேக்கர்ட் ஹார்ட் பள்ளிகளில், பலர் தங்கியிருப்பதாக புகார் வந்ததால், சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு தங்கியிருந்த, பாதிரியார், கன்னியாஸ்திரி, பணியாளர் விபரங்களை கேட்டறிந்தனர். அதேபோல், அரசின் தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா, கோடை விழா மலர்கண்காட்சிக்கு, வெளியூரிலிருந்து கொண்டு வந்த பூச்செடி நாற்றுகளை தயார் செய்யும் பணிக்கு, 30க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்கள் இணைந்து பணிபுரிவதாக தகவல் கிடைத்தது. இதனால், அங்கும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய ஆலோசனை வழங்கினர். பின், ஏற்காட்டில் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் கைகளில் முத்திரை குத்தி, அவர்களது வீடுகளின் வெளியே 'நோட்டீஸ்' ஒட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X