பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு தொகுதி நிதி ரூ.50 லட்சம் வழங்கப்படும்'

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: 'கொரோனா வைரஸ்' தடுப்பு நடவடிக்கைக்கு, தொகுதி நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக, சேலம் எம்.பி., பார்த்திபன் கூறினார்.
சேலம், கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று வந்த எம்.பி., பார்த்திபன், தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 'கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு' 50 லட்சம் ரூபாய் வழங்குவதற்கான பரிந்துரை கடிதத்தை, கலெக்டர் ராமனிடம் வழங்கினார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரைஸ முற்றிலும் அகற்ற வேண்டும். அதற்காக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் வழங்கவுள்ளேன். இதற்கான பரிந்துரை கடிதத்தை கலெக்டரிடம் வழங்கினேன். இதேபோல், நாமக்கல், கள்ளக் குறிச்சி, தர்மபுரி தொகுதி தி.மு.க., - எம்.பி.,க்களும், சேலம் மருத்துவமனைக்கு தலா, 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளனர். முதல்கட்டமாக, 'கொரோனா' பாதிப்பு நிதியாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கள்ளக்குறிச்சி எம்.பி.,யும்...: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., கவுதமசிகாமணி, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் என, 20 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்க, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், 'கொரோனாவுக்கு தேவையான உபகரணம் உள்ளிட்டவற்றுக்கு, கூடுதல் நிதி தேவைப்பட்டாலும், அதற்கான நிதி வழங்க தயாராக உள்ளேன்' என, எம்.பி., உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X