பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் திறந்தவெளியில் சிகிச்சை

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஓமலூர்: 'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, திறந்தவெளியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்படுகிறது. 'கொரோனா வைரஸ்' பரவலை தவிர்க்க, மருத்துவமனைகளில் கூட்டத்தை சேர்க்க கூடாது என்றும், கைகளை கழுவிய பின், மருத்துவமனைக்குள் அனுமதிக்கவும், அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நுழைவாயில் அருகே, இரு மருந்துவர்கள் அமர்ந்து, புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்றனர். மேற்கூரையுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில், ஊசி போடவும், பரிசோதனை செய்யும் இடமாகவும் மாற்றியுள்ளனர். சிகிச்சைக்கு வருவோர், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக நிற்க வைத்து, ஓ.பி., சீட்டு வழங்குகின்றனர். 144 தடை உத்தரவால், புறநோயாளிகள் பிரிவில், போதிய கூட்டம் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X