பொது செய்தி

தமிழ்நாடு

ஊர் நுழைவு பகுதியில் தடுப்பு அமைப்பு: கைகளை கழுவியபின் உள்ளே வர அனுமதி

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூரின், பல்வேறு கிராமங்களில் ஊருக்குள் நுழையும் இருசக்கர வாகன ஓட்டிகள், கைகளை கழுவிய பின் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன், நுழைவு பகுதியில் தடுப்புகள் அமைத்துள்ளனர்.
'கொரோனா வைரஸ்' தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாவட்டம், ஆத்தூர், செல்லியம்பாளையம் ஊர் நுழைவு பகுதியில், நான்கு சக்கர வாகனங்கள் செல்லாதபடி, தடுப்புகள் அமைத்துள்ளனர். அத்துடன், நுழைவு பகுதியில் உள்ளே வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், கைகளை கழுவிய பின், கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்கின்றனர். பின், இருசக்கர வாகனங்கள் மீது, கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. அதேபோல், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றிய பகுதிகளில் பல ஊர்களில், நுழைவு பகுதியில் தற்காலிகமாக மரக்கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், தூய்மைக் குழுவினர் கிருமி நாசினிகளை தெளித்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

சேனைப்பாளையத்தில்...: வீரபாண்டியில், சேனைப்பாளையம், ராக்கிப்பட்டி ஊராட்சிகள் சந்திக்கும் எல்லைப்பகுதியில், ஆழ்துளை குழாய் தண்ணீர் தொட்டி உள்ளது. அதன் அருகே, சேனைப்பாளையம் ஊராட்சி சார்பில், தலைவர் அழகேசன் பெயருடன், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க, ஊராட்சி எல்லைக்குள் வரும் மக்கள், தண்ணீர் குழாயில், சுத்தமாக தங்கள் கைகளை, 'சோப்' மூலம் கழுவிய பின்பே நுழைய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எட்டிமாணிக்கம்பட்டி ஊராட்சி, அக்கரபாளையம் ஊராட்சிகள் சார்பில், தண்ணீர் தொட்டி அருகே, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

வெளியாட்கள் நுழைய தடை: இளம்பிள்ளையில், குறுகலான வீதிகள் நிறைந்த, சித்தேஸ்வரா நகரில், பல தொகுப்பு குடியிருப்புகள் உள்ளன. ஒரு குடியிருப்பு தொகுப்பிலிருந்து, மற்றொரு தொகுப்புக்கு செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். 'கொரோனா வைரஸ்' பரவாமல் தடுக்க, நேற்று முதல், 'இப்பகுதியில் வெளிநபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. உறவினர்கள், நண்பர்கள் தொலைபேசியில் பேசிகொள்ளவும்' என, அறிவித்து, தங்கள் குடியிருப்பு முன், தடை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து, மக்கள் கூறுகையில், 'தொற்று பரவாமல் தடுக்க, அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதால், அறிவிப்பு பலகை வைத்து, தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். பிரதான சாலையில், போலீசார் விரட்டினால், வீதி வழியாக, சில வாகன ஓட்டிகள் வருகின்றனர். அவர்களை தடுக்கவும், பலகை வைத்துள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X