பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்கே வரும் மளிகை பொருட்கள்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: மளிகை, காய்கறி தேவைப்படுவோருக்கு, வீடு தேடி பொருட்கள் வழங்க, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மளிகை, காய்கறி கடைகள் முன்வந்துள்ளன.
இதுதொடர்பாக, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தேவையின்றி வீட்டுக்கு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர், மாற்றுத்திறனாளி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், கர்ப்பிணி உள்ளிட்டோர், தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறி பொருட்களை, வீட்டிலிருந்தே தனியார் மளிகை விற்பனை கடைகளில், அப்பொருட்களின் விலையோடு, வினியோக கட்டணம், 20 ரூபாய் கூடுதலாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். உணவகங்கள், மளிகை கடைகளில், நேர வரம்பின்றி நாள் முழுதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பொருட்கள் ஆர்டர் செய்தால், வீடுகளுக்கே வினியோகிக்க, கீழ்கண்ட கடைகள் முன்வந்துள்ளன.

மக்கள், தாங்கள் பயன்படுத்திய முக கவசங்களை, எளிதில் மட்கும் பேப்பரில் மடித்து, சிவப்பு வண்ண பேனாவால், பெருக்கல் குறியிட்டு, குப்பை தொட்டியில் போட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது, சுகாதார பணியாளர், உரிய பாதுகாப்புடன் அப்புறப்படுத்த எளிதாக இருக்கும் என, கலெக்டர் ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X