பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பகுதிகளில் காய்கறி, உழவர் சந்தைகள் இடமாற்றம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகர பகுதிகளில் செயல்படும், தினசரி காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் தினசரி சந்தை, உழவர் சந்தைகள், மார்ச், 28(நாளை) முதல், விசாலமான இடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இதில், சேலம், ஜங்ஷனிலுள்ள உழவர் சந்தை, பால் மார்க்கெட் தினசரி சந்தை ஆகியவை, புது பஸ் ஸ்டாண்டில் செயல்படும். அஸ்தம்பட்டி உழவர் சந்தை, சிறைச்சாலை முனியப்பன் கோவில் வளாகத்தில் செயல்படும். அம்மாபேட்டை மண்டலம், வாசவி மஹால் அருகேவுள்ள, ஆற்றோர மார்க்கெட், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிலும், 38வது வார்டு, காந்தி மைதானத்திலுள்ள காய்கறி சந்தை, அருகிலுள்ள செங்குந்தர் மேட்டுத்தெருவிலும் செயல்படும். அம்மாபேட்டை உழவர் சந்தை, அருகிலுள்ள காமராஜர் காலனி முதல் தெருவிலும், தாதகாப்பட்டி உழவர் சந்தை, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மைதானத்திலும் செயல்படும். கருங்கல்பட்டி மார்க்கெட், அருகிலுள்ள நான்காம் நம்பர் மார்க்கெட் தெருவிலும், 52வது வார்டிலுள்ள கொண்டலாம்பட்டி மார்க்கெட், கொண்டலாம்பட்டி பைபாஸிலுள்ள படையப்பா நகர் காலியிடத்திலும் செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.* ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்ட காய்கறி மார்க்கெட், ஓமலூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள, வேலாசாமி செட்டியார் பள்ளி மைதானத்துக்கு மாற்ற, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்றிரவு, பஸ் ஸ்டாண்டிலிருந்த காய்கறி உரிமையாளர்களிடம் போலீசார் தெரிவித்து, இன்று முதல், பள்ளி மைதானத்தில் போதிய இடைவெளி விட்டு கடையை அமைக்க அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X