பொது செய்தி

தமிழ்நாடு

மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக கட்டுமான பணி மந்தம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

சேலம்: மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம் கட்ட, 5.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், பணி ஆரம்பகட்டத்திலேயே உள்ளது.
சேலம், மெய்யனூரிலுள்ள, மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகம், 24 ஆண்டாக, வாடகை கட்டடத்தில் உள்ளது. தற்போது, அதற்கு, ஒரு லட்சம் ரூபாய் வாடகை வழங்கப்படுகிறது. அதன் செலவினத்தை குறைக்க, சேலம் அடுத்த, தளவாய்பட்டியில், 1,470 ச.மீ., நில அளவீடு செய்து, சொந்த கட்டடம் கட்ட, ஐந்து கோடியே, 32 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், தூண்கள் நிறுவும் பணி, ஆரம்ப நிலையிலேயே கிடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, கட்டுமான உதவி செயற்பொறியாளர் முருகேசன் கூறியதாவது: மண்ணின் தன்மை உறுதியாக இல்லை. பக்கத்தில் ஏரி இருப்பதால், தூண்கள் அமைக்க குழி வெட்டியபோது, 5 அடி ஆழத்தில், ஊற்றுநீர் பீறிட்டு வெளியேறி, தேங்கி நிற்பதால், கட்டுமானம் தொடங்க தாமதமாகி வருகிறது. தற்போது, மின் மோட்டார் உதவியுடன், தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிரமம் உள்ளது. இருந்தும், தண்ணீரை வெளியேற்றிவிட்டு, புது தொழில் நுட்பத்தில், தூண் நிறுவிய பின், பணி துரிதமாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X