பொது செய்தி

தமிழ்நாடு

கல்வராயன்மலை வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச்செல்ல தடை

Added : மார் 27, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்: கல்வராயன்மலை வனச்சரக பகுதி யில், எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச்சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வராயன்மலை வனச்சரகர் ஞானராஜ் கூறியதாவது: கல்வராயன்மலை வனச்சரகம், சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன்மலையில், ஏராளமான மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க, தற்காலிக தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம், வனப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அத்துமீறி நுழைந்து, மது அருந்துவது, பிளாஸ்டிக் பாட்டில்களை வீசிச் செல்வது, மரங்களை வெட்ட முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீ பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில், தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தியுள்ளோம். விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தொட்டிகளை தயாராக வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X