சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்ற தாய் கைது

Added : மார் 27, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு கல்லபாறையை சேர்ந்தவர் பெருமாள், 46, கூலித்தொழிலாளி; இவரது மனைவி ஜெயலட்சுமி, 28; இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட தகராறால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயலட்சுமி, கல்லபாறையில் தனியாக வசித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ், 26. இவருக்கும், ஜெயலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதில், ஜெயலட்சுமி கர்ப்பமானார். கடந்த, 20ல், ஜெயலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வளர்க்க விருப்பமின்றி, குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று, குழந்தையை கோணிப்பையில் கட்டி, அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசினார். நேற்று காலை கிணற்றில் சாக்குமூட்டை மிதந்துள்ளது. இது குறித்த தகவலின்படி, வேப்பங்குப்பம் போலீசார், சம்பவ இடம் சென்று, சாக்குமூட்டையை மீட்டனர். இதில், பெண் குழந்தையின் சடலம் இருந்துள்ளது. விசாரணையில், ஜெயலட்சுமி தன் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X