சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திட்டியதால் மகன் தற்கொலை; வேதனையில் தந்தை தூக்கிட்டு சாவு

Added : மார் 27, 2020
Share
Advertisement

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே, தந்தை திட்டியதால், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேதனையில், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 57; இவரது மகன் குமார், 31; விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. நேற்று முன்தினம் குமார், விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் அவரை, தந்தை ஏழுமலை கண்டித்துவிட்டு, நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மனவேதனையடைந்த குமார், சிறிது நேரத்தில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகன் இறந்த செய்தியை கேட்ட ஏழுமலை, மருத்துவமனைக்கு சென்று கதறி அழுதார். மனவேதனையில் நேற்று காலை ஊர் திரும்பிய அவர், தனது விவசாய நிலத்துக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த குமாரின் மனைவி பிரியா, தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X